OG

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியானOGதிரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.



OG திரைப்படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருக்கு சொகுசு கார் பரிசு கொடுத்த பவன் கல்யாண் - Related Image

பவன் கல்யாண் நடிப்பில் இந்த ஆண்டு ஹரி ஹர வீர மல்லு எனும் திரைப்படம் வெளிவந்து தோல்வியை சந்தித்தது.

ஆனாலும், OG படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படியே அவர்களது எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.

கார் பரிசு

இந்த நிலையில், OG திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் சுஜித்துக்கு புதிய Land Rover Defender சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் பவன் கல்யாண்.

இந்த Land Rover Defender காரின் விலை ரூ. 98 லட்சம் முதல் ரூ. 2.60 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.