மாஸ்டர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2021ஆம் ஆண்டு வெளிவந்த படம் மாஸ்டர். இப்படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.



5 ஆண்டுகளை கடந்துள்ள மாஸ்டர் படம்.. மொத்த வசூல் விவரம் இதோ - Related Image

மேலும் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் மகேந்திரன், சாந்தனு,ஆண்ட்ரியாஎன பலரும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கொரோனா காலகட்டத்திற்கு பின் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என கேள்வி எழுந்த நிலையில், மாஸ்டர் படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பதிலளித்தது.

மொத்த வசூல்

இன்றுடன் இப்படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதனை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மாபெரும் வெற்றிபெற்ற மாஸ்டர் படம் கொரோனா தாக்கத்திற்கு பின் திரையரங்கில் வெளியாகி ரூ. 220+ கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.