வா வாத்தியார்

சூது கவ்வும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் நலன் குமாரசாமி.



5 நாட்களில் வா வாத்தியார் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இதை தொடர்ந்து இவர் இயக்கிய காதலும் கடந்து போகும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் எப்போது புதிய படம் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அப்படி காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படம்தான் வாவாத்தியார். இப்படத்தில் முதல் முறையாக கார்த்தியுடன் கைகோர்த்திருந்தார் இயக்குநர் நலன். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த வா வாத்தியார் படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் வா வாத்தியார் படம் உலகளவில் இதுவரை ரூ. 12.5 கோடி வசூல் செய்துள்ளது.