விஜய் டிவி

சீரியல்களின் ராஜாவாக இருக்கும் சன் டிவிக்கு டப் கொடுக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட சூப்பரான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

டாப் 5 என்றால் சன் டிவி தான் என இருந்ததை விஜய் டிவி சீரியல்கள் முறியடித்துள்ளது.

டிஆர்பியில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்கள் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

மறு ஒளிபரப்பு

பிக்பா1 நிகழ்ச்சி களமிறக்கிய போது சில சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து சில சீரியல்களின் நேரத்தை விஜய் டிவி மாற்றி இருந்தார்கள்.

இப்போதுபிக்பாஸ் 9பொங்கல் நாளில் முடிவுக்கு வரப்போகிறது, இதனால் நிறைய புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.

சுட்டும் விழி சுடரே, அழகே அழகு, கண்டேனடி என மொத்தம் 3 சீரியல்கள் விஜய் டிவியில் புதியதாக களமிறங்குகிறது.

இந்த நிலையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சின்ன மருமகள் சீரியலை மறு ஒளிபரப்பு செய்யவும் முடிவு செய்துள்ளார்களாம். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

View this post on InstagramA post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil)

View this post on InstagramA post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by StarTellyதமிழ் 🌟 (@startellytamil)