

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். அதில் ரோகிணி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவரது மகன் தான் கிரிஷ் என்பதும் ஒட்டுமொத்தமாக எல்லா குடும்பத்தினருக்கும் தெரியவந்துவிட்டது.
அதனால் ரோகிணியை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். அடுத்து இந்த சீரியல் கதை எப்படி நகர போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

அடுத்த வாரத்தில் இருந்து..
சிறகடிக்க ஆசை தொடரில் அடுத்த வாரத்தில் இருந்து ஒரு மாற்றம் வர இருக்கிறது. இனி தினமும் ஒரு மணி நேரம் எபிசோடு வர இருக்கிறது.
இரவு 9 மணி முதல் 10 மணி வரை சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாக இருக்கிறது.
பிக் பாஸ் ஷோ இந்த வாரத்தோடு நிறைவு பெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
Source: Entertainment News