

பராசக்தி
சிவகார்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகிய மூவரும் முதல் முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம்தான்பராசக்தி.

இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க ஸ்ரீலீலா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் மலையாள நடிகர் பேசில் ஜோசப் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.
முன்பதிவு
வருகிற ஜனவரி 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் பராசக்தி படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது. இதுவரை நடந்த முன்பதிவில் இப்படம் ரூ. 1.26 கோடி வசூல் செய்துள்ளது.
Source: Entertainment News