சிறை

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம்சிறை. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்தார்.



சிறை படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இவருடன் இணைந்து அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2025ஆம் ஆண்டின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக சிறை இடம்பிடித்துள்ளது.

வசூல் விவரம்

பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள சிறை படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 11 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 11 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.