ரிஷப் ஷெட்டி

2022ல் வெளிவந்து கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம்காந்தாரா. இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி.



காந்தாரா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய ரிஷப் ஷெட்டி - Related Image

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 படத்தை இயக்கி நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் ரூ. 855 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளம்

அதன்படி, இனி வரும் திரைப்படங்களில் நடிக்க ரூ. 80 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.