

சர்வம் மாயா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும்நிவின்பாலி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம்தான் சர்வம் மாயா.

இப்படத்தை இயக்குநர் அகில் சத்யன் இயக்கியிருந்தார்.
அஜூ வர்கீஸ், வினீத், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் மூலம் ரியா சுபு நடிகையாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இதுவரை இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம், நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து ரூ. 100 கோடி வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
Source: Entertainment News