ஜனநாயகன்

தளபதி விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம்ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.



ப்ரீ புக்கிங் வசூல் வேட்டையில் ஜனநாயகன்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ - Related Image

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், சுனில், நாசர், பிரியாமணி, நரேன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசூல்

பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் இப்படத்தை 9ஆம் தேதி திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஜனநாயகன் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில், இதுவரை உலகளவில் நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.