ரெட்ட தல

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய்நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம்தான் ரெட்ட தல.



ரெட்ட தல படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா? தோல்வியா இல்லை வெற்றியா - Related Image

இயக்குநர் க்ரிஸ் திருக்குமரன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தில் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

டபுள் ஆக்ஷனில் அருண் விஜய், திரில்லர் கதைக்களம் என பல விதமான எதிர்பார்ப்புடன் இப்படம் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

வசூல்

இந்த நிலையில், ரெட்ட தல படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 4 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்துள்ளது.