

சிறை
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு கிடைத்த தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாகசிறைபடம் அமைந்தது. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான இப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
இப்படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 32 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Entertainment News