ராஜா சாப்

பாகுபலி படத்திற்கு பின் இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்துவிட்டார்பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சலார் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.



முதல் நாள் உலகளவில் ராஜா சாப் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? - Related Image

இதை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜா சாப். இப்படத்தை இயக்குநர் மருதி இயக்க நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிதி குமார், சஞ்சய் தத், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

வசூல்

ஹாரர் பேண்டஸி கதைக்களத்தில் இப்படம் நேற்று திரையரங்கங்களில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிரபாஸின் ராஜா சாப் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.