வித் லவ்

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவந்த படம் வித் லவ்.



10 நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.டூரிஸ்ட்பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக நம்மை வியக்க வைத்த அபிஷன், வித் லவ் படத்தில் ஹீரோவாக கலக்கியுள்ளார்.

மேலும், இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்

பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ள வித் லவ் படம் இதுவரை 10 நாட்களை கடந்துள்ளது. இந்த 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 21 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.