துரந்தர்

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் அக்ஷய் கன்னா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர்.



உலகளவில் ரூ. 1250 கோடி வசூல்.. நெட்பிளிக்ஸில் சாதனை படைக்கும் துரந்தர்.. வேற லெவல் - Related Image

மேலும் நடிகை சாரா அர்ஜுன் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் உலகளவில் ரூ. 1250 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

நெட்பிளிக்ஸில் சாதனை

திரையரங்கில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற இப்படம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி ஓடிடியில் வெளிவந்தது.

இந்த நிலையில்,ஓடிடியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள துரந்தர், இதுவரை 15.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதில் இரண்டாவது வாரத்தில் மட்டுமே 8.2 மில்லியன் பார்வையாளர்கள் படத்தை பார்த்துள்ளனர்.

மேலும், Non-English Movies என்கிற வகையில் இப்படம் உலகளவில் டாப் இடத்தில் உள்ளது. இதுமட்டுமின்றி 11 நாடுகளில் முதலிடத்திலும், 25 நாடுகளில் டாப் 10ல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.