



பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
அப்பா-மகன்கள் பாசத்தை கொண்டாடும் வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.

கதையில் கோமதி, பாண்டியனை வழிக்கு கொண்டுவர என்னென்னவோ செய்கிறோர், ஆனால் அவர் பேசுவது போல் தெரியவில்லை.
இதற்கு இடையில் மயிலுக்கு ரூ.10,000 ஆயிரத்திற்கு மீனா வேலை வாங்கி கொடுக்க இப்போது சமையலையும் சேர்த்த செய்ய மொத்தமாக ரூ. 17,000 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். இதனை மீனாவிடம் கூறி சந்தோஷப்படுகிறார்.

அடுத்து குமாருக்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கின்றன.
எபிசோட்
இன்றைய எபிசோடில் ஒரு பரபரப்பான விஷயம் நடக்கிறது. அதாவது குமாரு, அரசியை தான் மனதார விரும்புகிறான், அவளை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான் என புரிந்துகொண்ட அப்பத்தா யாருக்கும் தெரியாமல் ஒரு விஷயம் செய்கிறார்.
அதாவது குமாருக்கு ஏற்பாடு செய்த பெண் வீட்டாரை கோவிலில் சந்தித்து இந்த திருமணத்தை நிறுத்த கூறிவிடுகிறார், இதனால் திருமணமும் நின்றுவிடுகிறது.
இன்றைய எபிசோடில், குமாரு திருமணம் நிற்க காரணம் தனது அம்மா தான் என்பதை தெரிந்துகொண்டு வீட்டில் வந்து செம சண்டை போடுகிறார்.
மயில் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஒரே வாந்தி, மயக்கமாக உள்ளது என்கிறார், அதைக்கேட்ட அந்த பாட்டி கர்ப்பமாக இருக்கிறாயா என கேட்க மயில் தேதி தள்ளிப்போகிறதே நான் கர்ப்பமாக இருக்கிறேனா என யோசிக்கிறார்.
Source: Entertainment News