பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

மயில்-சரவணன் விவாகரத்து நடக்குமா இல்லையா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இன்னொரு பக்கம் கதிர்-ராஜி திருமணம் பற்றிய உண்மை வெளிவர பாண்டியன்-கோமதி தம்பதி இடையே பிரச்சனை இருந்த வண்ணம் உள்ளது.



பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் - Related Image

கதிர்-ராஜி திருமண உண்மையை தன்னிடம் சொல்லாததால் செந்தில் மீனா மீது கடும் கோபத்தில் உள்ளார்.

இப்படி 3 ஜோடிகளுக்கு இடையே பிரச்சனைகள் வெடித்த வண்ணம் இருக்க ராஜி-கதிர் இருவரும் சென்னையில் செம ஜாலியாக இருந்து வருகிறார்கள்.

மறுமணம்

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குழலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்விலாசினி.

இளையராஜாவின் உறவினரான இவர் பாடகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் கலக்கியுள்ளார்.

இவருக்கும் நடிகர் ஆதவனுக்கும் மறுமணம் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இருவரும் கையில் குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக இருவருக்கும் மறுமணம் நடந்து முடிந்துவிட்டது என செய்திகள் இணையத்தில் வைரலானது.

ஆனால் அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இன்னொரு பக்கம், விலாசினி சட்டப்படி விவாகரத்து வாங்கி தன்னுடைய கணவரை பிரிந்தவர், ஆனால் ஆதவனுக்கு இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை. அவருடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறதாம்.

அவருக்கு விவாகரத்து கிடைத்த பிறகே இருவரும் மறுமணம் பற்றி அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது. இப்படி இருவரைப்பற்றி நிறைய செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தாலும் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.