

ரீ ரிலீஸ்
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. கில்லி, சச்சின், படையப்பா, மங்காத்தா ஆகிய படங்கள் ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பின.

இதில் ரீ ரிலீஸில் அதிகவசூல்செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3 - சிலம்பாட்டம்
சமீபத்தில் சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படமும், தனுஷின் 3 திரைப்படமும் தெலுங்கில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ரீ ரிலீஸ் ஆகியுள்ள இந்த இரண்டு படங்களும் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிம்புவின் சிலம்பாட்டம் படம் ரூ. 30 லட்சமும், தனுஷின் 3 திரைப்படம் ரூ. 95+ லட்சமும் வசூல் செய்துள்ளன.
Source: Entertainment News