பூக்கி

நடிகர் விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து கடந்த வாரம் வெளிவந்த படம்பூக்கி.



3 நாட்களில் பூக்கி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? - Related Image

இப்படத்தில் அஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மார்கன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனா காணும் காலங்கள் வெப் தொடர் மூலம் பிரபலமான நடிகை தனுஷா, இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் உள்ள காதலை மையமாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

வசூல்

முதல் நாளில் இருந்தே குறைவான வசூலை ஈட்டி வரும் பூக்கி திரைப்படம் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் ரூ. 90 லட்சம் வசூல் செய்துள்ளது.