வித் லவ்

கடந்த வருடம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற படம் தமிழ் படங்களில் ஒன்று டூரிஸ்ட் பேமிலி. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார்.



3 நாட்களில் 'வித் லவ்' படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

முதல் படத்தில் இயக்குநராக வெற்றிகண்ட அபிஷன், 'வித் லவ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். எஸ்.ஜே. சூர்யா, பிரதீப் ரங்கநாதன் போன்றவர்களை போல் முதலில் இயக்குநராக களமிறங்கி பின் நடிகராக என்ட்ரி கொடுத்துள்ளார் அபிஷன்.

இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள வித் லவ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். இப்படத்தின் மூலம் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

வசூல்

இப்படம் வெளிவந்து 3 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வித் லவ் திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது.