தூய்மை பணியாளர் பத்மா என்ற பெண் சமீபத்தில் தான் கனெடெடுத்த 45 சவரன் நகைகளை நேர்மையாக போலீசில் ஒப்படைத்து இருந்தார். அவரது நேர்மைக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து அவரை கௌரவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வர வைத்து பாராட்டு தெரிவித்தார்.



தங்க செயின் பரிசாக கொடுத்த ரஜினிகாந்த்.. யாருக்கு பாருங்க - Related Image

தங்க செயின் பரிசு

பத்மாவுக்கு தங்க செயின் ஒன்றை ரஜினி பரிசளித்து இருக்கிறார். அதை பத்மா மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டிருக்கிறார்.



தங்க செயின் பரிசாக கொடுத்த ரஜினிகாந்த்.. யாருக்கு பாருங்க - Related Image

அவரது நேர்மையை பாரட்டி பேசிய ரஜினி, குடும்பத்தினர் எல்லோருடனும் போட்டோ எடுத்துக் கொண்டாராம்.

ரஜினி சார் தூரமாக நின்று கைகொடுப்பார் என நினைத்தேன், ஆனால் அருகில் வர வைத்து தட்டிக்கொடுத்து பாராட்டினார் என பத்மா நெகிழ்ச்சி உடன் பேசி இருக்கிறார்.