



மம்தா மோகன்தாஸ்
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் விஷால் நடித்து வெளிவந்த சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின், குரு என் ஆளு, தடையறத் தாக்க, எனிமி, மகாராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகை மம்தா இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு, அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்து ரசிகர்களுக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளித்துள்ளார்.
இந்நிலையில், தனது சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் நடிகை மம்தா.

ஏமாற்றிய நடிகர்
"எனக்கு காதல் செய்வது அல்லது டேட்டிங் செய்வது போன்ற விஷயங்களில் அதிக அனுபவம் இல்லை. ஆனால், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில், அதன்பின் ஒரு பெண்ணாக எனது சொந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்பினேன். அப்போது ஒரு பிரபலமான மலையாள நடிகர் என்னை டேட்டிங் செல்ல அழைத்தார். அதற்காக நான் என் அம்மாவிடம் ஒப்புதலையும் பெற்றேன்".
"ஆனால், ஒரு மாதத்திற்கு பின் தான் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்தேன். அதை என்னிடம் அவர் மறைத்திருந்தார். அது ஒரு உண்மையிலேயே அதிர்ச்சியான விஷயமாக அமைந்தது.
"பின், நான் வேறொருவரை சந்தித்தேன், ஆனால், அவர் என் நேரத்தை வீணடித்தார். அதனால் இந்த காதலும் டேட்டிங்கும் தேவையற்றது என்பதை உணர்ந்து கொண்டேன்".
திருமணம் - விவாகரத்து
இதன்பின் பேசிய அவர், "எனது சகோதரியின் திருமணத்தில் தான் முதல் முறையாக பிரஜித்தை சந்தித்தேன். எங்கள் இருவருக்குமான பிடித்த விஷயங்கள் பொதுவானதாக இருந்ததால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். எங்கள் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்தை வாழ்நாள் முழுவதுக்குமான உறவாக நினைத்தேன். ஆனால், 6 மாதத்தில் நாங்கள் பிரிய நேர்ந்தது. அது மிகவும் கடினமான முடிவு. அந்த நேரத்தில்தான் நான் நோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தேன்”.
"மீண்டும் நான் ஒரு திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால், அது உண்மையான உறவாக இருக்க வேண்டும். வாழ்க்கையை அர்ப்பணிப்புடன் வாழ்வதில் இருவரும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்க வேண்டும்" என நடிகை மம்தா கூறியுள்ளார்.
Source: Entertainment News