தபு

பாலிவுட் திரையுலகில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தபு. இவர் தமிழில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.



பெற்றோர்களின் விவாகரத்து, தந்தையை பார்த்ததே இல்லை.. நடிகை தபு வாழ்க்கையில் நடந்த ஷாக்கிங் சம்பவம் - Related Image

மேலும் தற்போது பூத் பங்களா, Slum Dog ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 54 வயதிலும் பிஸியான நடிகையாக இருக்கும் தபு இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து இவர் பேசியது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாக்கிங் சம்பவம்

இந்த நிலையில், நடிகைதபுதனது வாழ்க்கையில் நடந்த ஷாக்கிங்கான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

இதில் அவர், "எனது பெற்றோர் விவாகரத்து ஆகிவிட்டனர். அப்போது எனக்கு 3 வயது. எனது தந்தையுடன் எனக்கு எந்த தொடர்பும் இருந்தது இல்லை. நான் அவரை சந்திக்க விரும்பியதும் இல்லை. என் சகோதரி பரா நாஜ் மட்டும் அடிக்கடி சென்று அவரை சந்திப்பார்.

பள்ளியில் படிக்கும் போதே எனக்கு பெயர் தபசும் பாதிப்பா தான். தந்தையின் பெயரை எனக்கு பெயருக்கு பின்னால் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என நினைத்தேன். நான் தற்போது எனது வாழ்க்கையில் நல்லபடியாக செட்டிலாகி, மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் " என கூறியுள்ளார்.