

சீதா பயணம்
தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கிய ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம் என 12 படங்களை இயக்கியுள்ளார்.

பின் பல வருடங்களாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தஆக்ஷன் கிங் அர்ஜுன்இப்போது சீதா பயணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை நாயகியாக நடிக்க வைத்துள்ளார்.
நாயகனாக நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சனை கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர்களுடன் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த காதலர் தினத்திற்கு வித்தியாசமான ஒரு காதல் கதையை உருவாக்கி அதை தனக்கு தெரிந்த வகையில் நேர்த்தியான முறையில் உருவாக்கி சீதா பயணம் படத்தை ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் அர்ஜுன்.
படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்க 4 நாள் முடிவில் இப்படம் ரூ. 8.7 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
Source: Entertainment News