வித் லவ்

எப்போதுமே காதல் கதைக்களத்தில் வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி காதல் கதையில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம்தான் வித் லவ்.



நான்கு நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அவருடன் இணைந்து மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை தயாரித்திருந்தார்.

வசூல்

ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்க நாளுக்கு நாள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், நான்கு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 12.6 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.