

நடிகை பிரியங்கா சோப்ரா உலக அளவில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். ஒருகாலத்தில் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதல் திருமணம் செய்த அவருக்கு Malti Marie என்ற மகளும் இருக்கிறார்.

ஒதுக்கப்பட்டேன்
பாலிவுட் சினிமாவில் பணியாற்றிய போது பல விதங்களில் நான் ஒதுக்கப்படுவதாக உணர்ந்தேன். அதனால் தான் இந்திய சினிமாவை விட்டுவிட்டு ஹாலிவுட்டுக்கு சென்றேன் என பிரியங்கா சோப்ரா கூறி இருக்கிறார்.
தற்போது ராஜமௌலியின் வாரணாசி படத்தின் மூலமாக பிரியங்கா சோப்ரா மீண்டும் இந்திய சினிமாவுக்குள் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Entertainment News