

ராம் சரண்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன் சிரஞ்சீவி மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகர் ராம் சரண்.

2007ம் ஆண்டு Chirutha என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார், அதன்பின் மகதீரா என்ற படம் நடிக்க அப்படம் பெரிய வெற்றிப்பெற்றது, ராம் சரண் தெலுங்கு சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.
அடுத்தடுத்து படங்கள் நடித்தவருக்கு ரங்கஸ்தளம் என்ற படம் நல்ல பாராட்டுக்களை பெற்றுத் தந்தது.
கடைசியாக ராம் சரண், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படம் நடித்தார், ஆனால் படம் வெற்றிப்பெறவில்லை. தற்போது Peddi என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
குழந்தைகள்
ராம் சரண், உபாசனா என்பவரை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு க்ளின் காரா என்ற மகள் உள்ள நிலையில் இருவருக்கும் சமீபத்தில் ஒரு மகன் மற்றும் மகள் பிறந்தார்கள்.
தற்போது ராம் சரண்-உபாசனா தங்களது மகளுக்கு அன்வீரா தேவி என்றும் மகனுக்கு சிவராம் என்றும் பெயரிட்டுள்ளதாக சிரஞ்சீவி அழகான புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
View this post on InstagramA post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)
View this post on InstagramA post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)
Source: Entertainment News