வித் லவ்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் அபிஷன் ஜீவிந்த். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கண்ட இயக்குநர் அபிஷன் தற்போது வித் லவ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.



ஆறு நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க சௌந்தர்யாரஜினிகாந்த் தயாரித்திருந்தார். மேலும், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

வசூல்

காதல் கதைக்களத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த வித் லவ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், முதல் நாளில் இருந்தே வசூலில் இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், ஆறு நாட்களை கடந்திருக்கும் வித் லவ் படம் உலகளவில் ரூ. 16.8 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.