

சன் டிவி
பெண்கள் நாட்டின் கண்கள் என்பது போல சீரியல்கள் தான் எங்களது தொலைக்காட்சியின் கண்கள் என கெத்தாக நிறைய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் சன் தொலைக்காட்சி.

விதவிதமான கதைக்களத்துடன் சீரியல்கள் இருந்தாலும் பெண்களை மையப்படுத்திய சீரியல்களாகவே அதிகம் இருக்கும். இப்போது சன் டிவியில் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால் சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது.
விரைவில் அது முடிவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்து கயல் மற்றும் மருமகள் சீரியல்களின் மெகா சங்கமம் நடக்க உள்ளது, புரொமோவுடன் வெளியாகியுள்ளது.
‘
மாற்றம்
இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரும் திங்கள் முதல் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இரவு 10 மணிக்கும், சிங்கப்பெண்ணே சீரியல் இரவு 9.30 மணிக்கும், ஆடுகளம் சீரியல் இனி பிற்பகல் 3 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
Source: Entertainment News