நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவின் டாப் நாயகன் தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.



ரஜினி-கமலுக்கு பெரிய வெற்றி கொடுத்த இயக்குனருடன் இணையும் தனுஷ்... யார் தெரியுமா? - Related Image

இப்போது அவர் போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு பிறகு தனுஷ், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார், படத்திற்கு D55 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படத்தில் தனுஷுடன் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள், சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கான பூஜை அண்மையில் எல்லா நடிகர்கள் சூழ நடந்தது.

அடுத்த கூட்டணி

அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்துவரும் தனுஷ் புதியதாக கூட்டணி அமைக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது நடிப்பின் அரக்கனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் தனுஷ் முதன்முறையாக மணிரத்னம் அவர்களுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.