

மகாநதி
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி.

கடந்த ஜனவரி 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 700 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் இப்போது விஜய்-காவேரியின் கதையாக மாறிவிட்டது.
இதில் இருக்கும் இளம் ஜோடிகளில் விஜய்-காவேரிக்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இப்போது கதையில் ராகவ் செய்த வேலையால் விபத்தில் சிக்கி விஜய்-காவேரி இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், மருத்துவர் விஜய்-காவேரி நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூற பாட்டி பயத்தில் மயக்கம் அடைந்துவிடுகிறார். அவரை ஒருபக்கம் பெட்டில் சேர்த்துவிட்டு குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க போலீஸ் மருத்துவமனை வர நிவின் இதற்கு காரணம் ராகவ்வாக தான் இருப்பார் என கூற குடும்பத்தினர் பதறுகிறார்கள்.
கடைசியில் காவேரி நிலைமை மோசமாக இருப்பதால் குழந்தையை ஆபரேசன் செய்ய வேண்டும் என கூற குடும்பத்தினர் ஒப்புக் கொள்கின்றனர். பின் நாளைய எபிசோடின் புரொமோவில் காவேரி-விஜய்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என குழந்தையை குடும்பத்தினரிடம் காட்டுகிறார்கள்.
View this post on InstagramA post shared by Vijay TV Express (@vijaytvexpresss)
View this post on InstagramA post shared by Vijay TV Express (@vijaytvexpresss)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)
Source: Entertainment News