விஜய்யின் ஜனநாயகன் படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் எழுந்ததால் ரிலீஸ் ஆகவில்லை. அது பற்றி தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையிலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

தற்போது வழக்கு திரும்ப பெறப்பட்டு மீண்டும் சென்சார் போர்டுக்கு படம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இன்னும் சென்சார் சான்றிதழ் பற்றி எந்த உறுதியான தகவலும் வராத நிலையில், பட ரிலீஸ் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.



ஜனநாயகன் விநியோகஸ்தர் வெளியிட்ட அறிவிப்பு.. கடும் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் - Related Image

ஏப்ரல் 30 வரை ரிலீஸ் இல்லை..

இந்நிலையில் ஜனநாயகன் படத்தை கனடாவில் ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் York cinemas வெளியிட்ட அறிவிப்பில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஜனநாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை, அதனால் எல்லோரும் டிக்கெட்க்கு refund வாங்கிக்கொள்ளுங்கள் என கூறப்பட்டு இருக்கிறது.

அதனால் விஜய் ரசிகர்கள் தற்போது கடும் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.