

சன் டிவி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல், கயல் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில், வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பலசீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுகிறது.
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இருமலர்கள் சீரியல் மதியம் 2.30 மணிக்கும், ஆடுகளம் சீரியல் மதியம் 3.00 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் கயல் - மருமகள் மஹாசங்கமம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகும்.
மூன்று முடிச்சு சீரியல் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகும். சிங்கப்பெண்ணே இரவு 9.30 மணிக்கும், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இரவு 10.00 மணிக்கும் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Source: Entertainment News