

அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் அடுத்ததாக தனது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இம்மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் முழுமூச்சாக இறங்கி கலக்கிக்கொண்டு இருக்கிறார். கார் ரேஸில் கலந்துகொள்ளும் அஜித்தை பல திரையுலக நட்சத்திரங்கள் நேரில் சென்று சந்தித்து வருகிறார்கள். சிம்பு, நயன்தாரா, சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அனிருத், மாதவன், வெங்கட் பிரபு என இப்படி பலரும் அஜித்தை அங்கு சென்று சந்தித்து வருகின்றனர்.
கடுப்பான அஜித்
அதே போல் அஜித்தை காண அங்கு பல்லாயிரம் ரசிகர்கள் கூடுகின்றனர். தன்னை காண வரும் ரசிகர்களுடன் அஜித் புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தை காண ரசிகர்களின் செயலால் அஜித் கடுப்பாகி, please behave yourself, இது ஒன்னும் தியேட்டர் இல்ல என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை பார்க்க இந்தலிங்க்கை க்ளிக்செய்யுங்கள்..
Source: Entertainment News