கீழே கிடந்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மா என்ற பெண்ணுக்கு பாராட்டுகள் சமீபத்தில் குவிந்தது. அவரை நேரில் அழைத்தும் பல பிரபலங்கள் பாராட்டினார்கள்.

நேற்று நடிகர் ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவை குடும்பத்துடன் வர வைத்து தங்க சங்கிலியை பரிசாக கொடுத்து, அவரது நேர்மையை பாராட்டி இருந்தார்.

தாக்கி பேசிய இயக்குனர்

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பட புகழ் இயக்குனர் லெனின் பாரதி கோபமாக X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

"துப்பரவு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக்கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள் @rajinikanth அவர்களே.. உங்கள் பெருதன்மை வெங்காயத்தைக் காட்ட அவர்களை சீருடையோடுதான் அடையாளப்படுத்துவீர்களா போலி கொடை வள்ளல்களே.." என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

துப்பரவு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக்கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள்@rajinikanthஅவர்களே.. உங்கள் பெருதன்மை வெங்காயத்தைக் காட்ட அவர்களை சீருடையோடுதான் அடையாளப்படுத்துவீர்களா போலி கொடை வள்ளல்களே..pic.twitter.com/hi79coMVIh— leninbharathi (@leninbharathi1)February 3, 2026

துப்பரவு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ரிப்பன் பில்டிங் வாசலில் போராடிக்கொண்டிருந்த போதெல்லாம் எங்கு இருந்தீர்கள்@rajinikanthஅவர்களே.. உங்கள் பெருதன்மை வெங்காயத்தைக் காட்ட அவர்களை சீருடையோடுதான் அடையாளப்படுத்துவீர்களா போலி கொடை வள்ளல்களே..pic.twitter.com/hi79coMVIh