
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆணாதிக்க எண்ணம் கொண்ட ஆண்களிடம் இருந்து எதிர்நீச்சல் போட்டு சாதிக்கும் பெண்களின் கதையாக சீரியல் இருக்கும் என கூறப்பட்டது.
ஆனால் முதல் பாகமும் சரி இப்போது ஒளிபரப்பாகும் இரண்டாவது பாகமும் சரி பெண்கள் பெருமைக்கொள்ளும் அளவிற்கு எந்த விஷயமும் நடக்கவில்லை. மீண்டும் மீண்டும் வில்லன் குணசேகரன் ஜெயிக்கும் வகையிலேயே கதை அமைந்து வருகிறது.
இப்போதும் கதையில் வில்லன் குணசேகரன் குண்டாஸ் சட்டம் போட்டும் ஜம்முனு எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் தப்பிக்க நியாயமாக இருந்தாலும் எப்போதும் பெரிய சிக்கலில் சிக்கி தவித்து கொடுமை அனுபவிக்கிறார் ஜனனி.
இப்படி போகும் கதை மிகவும் வருத்தம் அடைய வைப்பதாக பல பெண்கள் கமெண்ட் செய்துவிட்டார்கள், ஆனால் இயக்குனர் கதையை மாற்றுவதாக தெரியவில்லை.
குட் நியூஸ்
இரண்டாம் பாகத்தை தாண்டி முதல் பாகத்திற்கு நிறைய பெண்கள் ரசிகர்களாக உள்ளனர், ஏனெனில் அதில் சில நேரங்களில் பெண்கள் எழுச்சிக்கான காட்சிகள் எல்லாம் வந்தன.
இதனால் சன் தொலைக்காட்சி முதல் பாகத்தை மறுஒளிபரப்பு செய்து வந்தார்கள், ஆனால் ஏதோ காரணங்களால் சில வாரம் நிறுத்தி வைத்தனர்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் முதல் பாகத்தை வரும் திங்கள் முதல் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மறுஒளிபரப்பு செய்ய உள்ளார்களாம்.
View this post on InstagramA post shared by ❤𝗧𝗡 𝗙𝗔𝗩𝗢𝗥𝗜𝗧𝗘 𝗦𝗘𝗥𝗜𝗔𝗟❤ (@familyserial_official)
View this post on InstagramA post shared by ❤𝗧𝗡 𝗙𝗔𝗩𝗢𝗥𝗜𝗧𝗘 𝗦𝗘𝗥𝗜𝗔𝗟❤ (@familyserial_official)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by ❤𝗧𝗡 𝗙𝗔𝗩𝗢𝗥𝗜𝗧𝗘 𝗦𝗘𝗥𝗜𝗔𝗟❤ (@familyserial_official)
Source: Entertainment News