தலைவர் தம்பி தலைமையில்

தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை கொடுத்தவர் நடிகர்ஜீவா. இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த படம் தலைவர் தம்பி தலைமையில். இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து இளவரசு, தம்பி ராமையா, பிரார்த்தனா ஆகியோர் நடித்திருந்தனர்.



தலைவர் தம்பி தலைமையில் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா? - Related Image

இயக்குநர் நிதீஷ் சஹதேவ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மலையாளத்தில் வெளியான Falimy எனும் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் ரேஸில் வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூலில் முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள்.

இறுதி வசூல்

இந்த நிலையில், தலைவர் தம்பி தலைமையில் படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் மொத்தமாக ரூ. 40 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.