ஜித்தன் ரமேஷ்

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் 3வது மகன் என்ற அடையாளத்துடன் நடிகராக என்ட்ரி கொடுத்தவர் தான் ரமேஷ்.



மாடியில் இருந்து விழுந்த மகள், ரத்தம் கொட்ட... மோசமாக சம்பவம் குறித்து ஜித்தன் ரமேஷ் - Related Image

இவர் முதன்முறையாக ஜித்தன் படம் மாபெரும் வெற்றியடைய ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார். இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு சரியாக கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் யார், என்ன கதை என எதைப்பற்றியும் யோசிக்காமல் அடுத்தடுத்து பல படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு, அதுதான் என் மார்க்கெட் போவதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்றார்.

மகள் பற்றி பேட்டி

பின் அந்த பேட்டியில் ஜித்தன் ரமேஷ் தனது மகள் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என் மகள் என்றால் எனக்கு உயிர், மகள் தான் பிறக்க வேண்டும் என நான் ரொம்பவும் ஆசைப்பட்டேன்.

என் மகளுக்கு 2 வயது இருக்கும்போது அவள் மாடியில் இருந்து விழுந்துவிட்டார். விழுந்ததில் தலையில் அடிபட்டு, முகத்தில் அடிபட்டு ரத்தமாக கொட்டுகிறது. 3, 4 ஆம்புலன்ஸ் ஏறி இறங்கி மருத்துவமனை மருத்துவமனையாக சென்றேன்.

அந்த சம்பவத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை, என் வாழ்வில் நான் மறக்க வேண்டும் என நினைக்கும் ஒரே விஷயம் இதுதான் என ஜித்தன் ரமேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.