நடிகை ராஷ்மிகா அவரது காதலர் விஜய் தேவரகொண்டாவை கடந்த பிப்ரவரி 26ம் தேதி கரம்பிடித்தார். மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்ட திருமணம் உதய்பூர் அரண்மனையில் நடந்து முடிந்தது.

திருமண போட்டோக்கள் எதுவும் லீக் ஆக கூடாது என்பதால் கெஸ்ட் ஆக வந்தவர்கள் போன்களை கவர் போட்டு மூடி சீல் வைத்து இருந்தனர்.

அதன் பின் திருமண போட்டோக்களை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருந்தனர்.

சாதனை

ராஷ்மிகாவின் இன்ஸ்டா கணக்கில் பதிவிட்ட திருமண போட்டோக்கள் வந்திருக்கும் லைக்குகள் மூலமாக புது சாதனை படைத்திருக்கிறது.

இதுவரை விராட் கோலி உலகக்கோப்பை உடன் பதிவிட்ட போட்டோவுக்கு 22 மில்லியன் லைக்குகள் வந்தது தான் சாதனையாக இருந்தது. அதை தற்போது முறியடித்து இருக்கும் ராஷ்மிகாவின் போட்டோவுக்கு 25 மில்லியன் லைக்குகள் இப்போது வரை வந்திருக்கிறது.

மேலும் லைக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆசிய அளவில் புது சாதனையை ராஷ்மிகா படைத்திருக்கிறார்.

View this post on InstagramA post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

View this post on InstagramA post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)