சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அதில் ஒரு தொடர் தான் சின்ன மருமகள்.



புதிய கார் வாங்கியுள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை சங்கவி... அழகிய வீடியோ இதோ - Related Image

கடந்த ஜனவரி 2024ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலில் நவீன்குமார் மற்றும் ஸ்வேதா முக்கிய நடிகர்களாக நடிக்கிறார்கள். 400க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ள இந்த கதை ஒரே டிராக்கில் இல்லாமல் மாறி மாறி செல்கிறது.

இப்போது கதையில் சேது-தமிழ் விவாகரத்து பெறுவார்களா இல்லையா என்பதோடு கதைக்களம் கடந்தசில வாரங்களாக ஒளிபரப்பாக இப்போது ஒன்றாக சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டுவிட்டனர்.

ஆனால் சேதுவின் சித்தி சூழ்ச்சியால் அவரை சில அடியாட்கள் அடித்துவிட தமிழை கடத்தி சென்றுவிடுகிறார்கள்.

புதிய கார்

இந்த சீரியலில் சேதுவின் அத்தை மகளாக தாமரை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சங்கவி ராஜேந்திரன்.

இவர் தனது இன்ஸ்டாவில் சூப்பர் விஷயத்தை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். அதாவது தைப்பூச தினத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

View this post on InstagramA post shared by Sankavi Rajendran (@sankavirajendran__official)

View this post on InstagramA post shared by Sankavi Rajendran (@sankavirajendran__official)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Sankavi Rajendran (@sankavirajendran__official)