

சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகிணி - மனோஜ் விவாகரத்து வழக்கு காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது.

மனோஜுக்குமனோஜ் தனக்கு ரோகிணியிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டாலும், தனக்கு விவாகரத்து வேண்டாம் மனோஜுடன் சேர்ந்து வாழவேண்டும் என தனக்காக தானே நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார் ரோகிணி.
ரோகிணி எதிராக வந்த சாட்சிகள்
இதற்கு முன் நீதிமன்றத்தில், தனக்கு நடந்த முதல் திருமணம் மனோஜுக்கு தெரியும் என ரோகிணி பொய் கூறியிருந்தார். ரோகிணி கூறுவது பொய் என நிரூபிக்க, தற்போது மலேசியா மாமாவாக நடித்தவரையும், ரோகிணியின் தோழி வித்யாவையும் சாட்சிகளாக நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் தனக்கு எதிராக சாட்சி கூற, அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார் ரோகிணி. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Entertainment News