

ஜனனி, மதிவதனி
டாக்டர் தேவசகாயம் வீட்டில் மாட்டிக்கொண்டிருக்கும் ஜனனி அங்கிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும் என முயற்சி செய்து வந்தார். மேலும், அங்கு சிக்கிக்கொண்டிருக்கும் மற்றொரு பெண் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்தார்.

இந்த நிலையில், இன்றைய எபிசோட் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், தேவசகாயமிடம் சிக்கிக்கொண்டிருக்கும் பெண் வேறு யாரும் இல்லை கலெக்டர்மதிவதனிதான் என்பதை ஜனனி கண்டுபிடித்துவிட்டார். அதன்பின் அங்குள்ள அடியாட்களை அடித்து, மதிவதனியை காப்பாற்றுகிறார் ஜனனி.
ஷாக்கிங் புரோமோ
அங்கிருந்து இருவரும் தப்பிக்கும் வேலையில், தேவசகாயம் அங்கு வந்துவிடுகிறார். தேவசகாயத்தை பார்த்தவுடன் ஜனனி மற்றும் மதிவதனி இருவரும் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்கள்.
இதன்பின், சக்தி தனது அண்ணன் ஆதி குணசேகரனிடம் எனக்கு பணம் வேண்டும் என கேட்க, நீ வாக்குவாதம் செய்யாதே நான் காசு தருகிறேன். ஆனால், அதற்கு பதிலாக நான் கேட்கும் சில விஷயங்களை நீ முடித்து கொடுக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறார் குணசேகரன்..
Source: Entertainment News