

நாஞ்சில் விஜயன்
விஜய் தொலைக்காட்சி என்று நினைத்தாலே சில கலைஞர்களின் முகங்கள் நியாபகம் வந்துவிடும், அப்படி ஒரு பிரபலம் தான் நாஞ்சில் விஜயன்.

சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கியுள்ளார்.பெரும்பாலும் இவர் பெண் வேடத்தில் வந்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.
நாஞ்சில் விஜயன் எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதில் நன்றாக பொறுந்தி நடிப்பது இவருக்கு கை வந்த கலை. விஜய் டிவியை தாண்டி ஜெயா டிவி ஷோ, தனியார் நிகழ்ச்சிகள் என நிறைய கலந்துகொண்டு வருகிறார்.
குட் நியூஸ்
நகைச்சுவைகளில் கலக்கி வந்த நாஞ்சில் விஜயன் கடந்த 2023ம் ஆண்டு மரியா மேக்ரினா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான சின்னத்திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு நாஞ்சில் விஜயனுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் பல போராட்டங்கள் கஷ்டங்களுக்கு பிறகு ஒரு புதிய வீட்டுமனை வாங்கியுள்ளாராம்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஷேர் செய்து இந்த விஷயத்தை நாஞ்சில் விஜயன் கூற அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
View this post on InstagramA post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)
View this post on InstagramA post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)
Source: Entertainment News