மகாநதி

4 சகோதரிகளின் கதையாக விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொடர் மகாநதி சீரியல்.



விஜய் டிவியின் மகாநதி சீரியலில் யாரும் எதிர்ப்பார்க்காத கதைக்களம்... என்ன தெரியுமா? - Related Image

ஆனால் இப்போது கதை விஜய்-காவேரி கதையாக மாறி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்-காவேரி ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது, அவர்களுக்காக நிறைய ரசிகர்கள் பக்கங்களும் உள்ளது.

இப்போது கதையில் ராகவ் ஏற்படுத்திய விபத்தால் விஜய்-காவேரி அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது, உடனே விஜய்யின் பாட்டி புதிய பிளான் போட்டு இருவரையும் பிரித்துவிட்டார்.

சாரதாவிடம் விஜய் நிலைமை மோசமாக உள்ளது பேத்தியை மட்டும் எங்களிடம் விட்டுவிட்டு நீங்கள் காவேரி அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றுவிடுங்கள் என்றார். முதலில் மறுத்தவர்கள் பின் காவேரியை அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்புகிறார்.

அடுத்த கதைக்களம்

இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த விஜய்யிடம் காவேரி இறந்துவிட்டார் என்கிறார்கள், அதைக்கேட்டு அவர் செம ஷாக் ஆகிறார். காவேரியை நினைத்து அழாதே இனி உன் குழந்தைக்காக வாழு என குழந்தையை அவரிடம் கொடுக்கிறார்கள்.

குழந்தையை பார்த்து கதறி அழுகிறார் விஜய். பின் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், ஐந்து வருடங்கள் கழித்து கதைக்களத்தை காட்டுகிறார்கள். அதில் விஜய் தனது மகளுடன் ஜாலியாக இருக்கும் காட்சிகள் காட்டப்படுகிறது.

View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)

View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

அதிரடியாக 5 வருடங்கள் கழித்து கதைக்களத்தை காட்டுவதை ரசிகர்கள் யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.