தாய் கிழவி

கலை அரசி நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தாய்கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார்.



11 நாட்களில் தாய் கிழவி படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? - Related Image

மேலும், முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.

வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது

வசூல்

இதனால், முதல் நாளில் இருந்தே வசூலில் தாய் கிழவி படம் பட்டையை கிளப்பி வந்தது.

இந்நிலையில், 11 நாட்களில் தாய் கிழவி திரைப்படம் உலகளவில் ரூ. 53 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளாக்பஸ்டர் ஆகியுள்ள இப்படம் இனி வரும் நாட்களிலும் வசூல் வேட்டையை தொடரும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.