

துரந்தர் 2
பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் துரந்தர் 2.

இப்படத்தின் முதல் பாகம் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த நிலையில், இரண்டாம் பாகமும் 7 நாட்களில் அதில் இணைந்துவிட்டது. இதன்மூலம் இந்திய சினிமாவில் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த 10வது திரைப்படமாகதுரந்தர்2 சாதனை படைத்துள்ளது.
வசூல்
இப்படம் வெளிவந்த நாளில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் துரந்தர் 2 திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, துரந்தர் 2 உலகளவில் ரூ. 1275 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Entertainment News