பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

கோமதி-பாண்டியன் சண்டையே பெரிய பிரச்சனையாக போய்க் கொண்டிருக்கிறது, இதற்கு இடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் வேறொரு புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.



குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் - Related Image

அதாவது சரவணனை அவரது தோழியுடன் பார்த்த மாணிக்கம் இதனை தனது மனைவி பாக்கியமிடம் கூற அவர் நேராக பாண்டியன் வீட்டிற்கு வந்து சண்டை போடுகிறார். சரவணனை பற்றி மோசமாக பேச அவர் மாணிக்கத்தை அடித்துவிடுகிறார்.

பிரச்சனை பெரியதாகும் சமயத்தில் எப்படியோ மயில் வந்து தனது அம்மா-அப்பாவை அழைத்து சென்று நான் என் குழந்தையை பார்த்துக்கொள்வேன் என கூறுகிறார்.



குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் - Related Image

எபிசோட்

இன்றைய எபிசோடில், மீனா-மயில் இருவரும் வெளியே சந்தித்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது திடீரென ராஜி அந்தப்பக்கம் வர மீனாவை தனியாக அழைத்து நீங்கள் எப்படி மயில் அக்காவுடன் பேசுகிறீர்கள், அவர் குடும்பத்திற்கு எவ்வளவு துரோகம் செய்துள்ளார் என கோபமாக திட்டுகிறார்.

பின் ராஜியை மயில் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச்சென்று எல்லா உண்மையையும் கூறுகிறார் மீனா. அதையெல்லாம் கேட்டு முதலில் ஷாக் ஆன ராஜி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

கதிருடன் வெளியே சென்றவர் மீனாவிற்கு போன் செய்து எனது கணவரிடம் மட்டுமாவது உண்மையை கூறுகிறேன் என கேட்க அவர் வேண்டாம் என கூறி சில காரணங்களை சொல்கிறார். மீனா சொன்ன விஷயத்தை கேட்ட ராஜி கதிரிடம் மறைக்கிறார்.

எபிசோட் கடைசியில், ராஜி-கதிரிடம் பேச ராஜியின் அப்பா வருகிறார். தனது மகளிடம் படிப்பு குறித்து கேட்டவர் பாண்டியன் பணம் கேட்ட விஷயம் பற்றி கேட்டுவிட்டு நான் பணம் தரட்டுமா என்கிறார். உடனே கதிர் நான் கொடுத்துக்கொள்கிறேன் பணம் எல்லாம் வேண்டாம் என்று கூறிவிடுகிறார்.

You May Like This Video