மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மடோன் அஸ்வின். இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

மாவீரன்



சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாவீரன் 2 படம்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் - Related Image

இதன்பின், இவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம்தான் மாவீரன். சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த மடோன் அஸ்வின் தனது இரண்டாவது படத்திலும் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அதிதி ஷங்கர், இயக்குநர் மிஸ்கின், சுனில், சரிதா ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி அசரீரி குரலாக இப்படத்தில் அசத்தியிருந்தார்.



சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த மாவீரன் 2 படம்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட் - Related Image

இதை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து மடோன் அஸ்வின் படம் பண்ணப்போகிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், அப்படம் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை.

மாவீரன் 2

இந்த நிலையில், மாவீரன் 2 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், மாவீரன் 2 படத்தின் கதையை எழுத மடோன் அஸ்வின் தொடங்கிவிட்டாராம்.

இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் மாவீரன் 2 படத்திற்கான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.