

அய்யனார் துணை
நிலா தனது தோழிகளுடன் சேர்ந்து சொந்தமாக பிஸினஸ் தொடங்கியுள்ளார். இதற்காக முதலில் அவரிடம் ரூ. 5 லட்சம் கேட்கப்பட்ட நிலையில், 'முதலில் பிசினஸை தொடங்குவோம் அதன்பின் நீ பணத்தை தா' என நிலாவின் தோழி கூறிவிட்டார்.

இந்த நிலையில், நிலா தனது தோழிகளுடன் சேர்ந்து நல்லபடியாக தொழிலை தொடங்க, அங்கு வந்த ஒருவர் 'கம்பெனி மூன்று பேர் பெயரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கு, ஆனால் நிலா மட்டும் ஒரு ரூபாய் கூட தரவில்லை' என கூற, நிலா அவமானப்படுத்தப்படுகிறார்.
ரூ. 5 லட்சம் திருடும் சோழன்
இதை பார்க்கும் சோழன், எப்படியாவது ரூ. 5 லட்சத்தை ஏற்பாடு செய்யவேண்டும் என, தான் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று ரூ. 5 லட்சம் கடன் கிடைக்குமா என கேட்கிறார், அதற்கு முதலாளி தர மறுக்கிறார்.
இதனால், தனது முதலாளி ஆபிஸில் இல்லாத சமயத்தில் அந்த ரூ. 5 லட்சம் பணத்தை திருடுகிறார் சோழன். நிலாவுக்காக சோழன் இப்படி செய்துள்ளது எவ்வளவு பெரிய வினையை அய்யனார் துணை குடும்பத்திற்கு கொண்டு வரப்போகிறதோ?
Source: Entertainment News