யூத் படம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு யூத் படம் என்று கூறியதும் விஜய்யின் படம் தான் நியாபகம் வரும்.



9 நாட்களில் கென் கருணாஸின் யூத் திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்.. செம கலெக்ஷன் - Related Image

இப்போது யூத் படம் என்றால் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள படம் தான் நியாபகத்திற்கு வருகிறது. கடந்த மார்ச் 19ம் தேதி இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரைத் தவிர்த்து, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பள்ளியில் படிக்கும் கென், காதலியைத் தேடி அலைய கல்லூரியிலும் அந்தப் பயணம் தொடர்கிறது. பின் காதல், ஏமாற்றம், பிரேக் அப் என வழக்கம் போல் காதல் கலாட்டாக்கள் நடக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ்

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள கென் கருணாஸின் யூத் படம் இதுவரை மொத்தமாக ரூ. 40 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

திரையரங்குகளில் வெற்றிப்பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளதாம்.